" alt="" aria-hidden="true" />
1முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் முழு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனஅரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் முஸ்தபா வலியுறுத்தி உள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்றானது உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேலாக பரவி இதுவரை 18 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் பல லட்சம் பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அந்தந்த நாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இந்தியாவிலும் ஒரு நோய் தொற்றால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றால் இந்தியாவில் தற்போது 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று இரவு 12 மணி முதல் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக பாரத பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த உத்தரவுக்கு ஆதரவளிக்கும் வகையில் மக்கள் அனைவரும் வீடுகளில் தங்கியிருந்து இந்த கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவோம் என சபதம் ஏற்போம். ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம், தமிழகத்தில் தற்போது உருவான வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருவதாக சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் பள்ளிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுமா இல்லை விடுமுறையா என்ற சந்தேகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் அச்சத்தால் மாணவர்கள் பெற்றோர்கள் எல்லாம் மனதளவில் பெரும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வரும் நாட்களில் ஆண்டு தேர்வை நடத்தினால் அதில் மாணவர் தேர்ச்சி விகிதம் வெகுவாக குறையும். ஆகவே 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு நடத்தாமல் மாணவர்கள் அனைவரும் முழுத் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என கூறி உள்ளா